For Appointments Contact :

M.R. Siddhalaya Siddha Hospital

Healing Roots, Modern Trust.

Treatments

சித்தா சிகிச்சைகள் (Siddha Treatments)

     சித்த மருத்துவம், மனித உடலின் ஆரோக்கியம் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தாதுக்களின் சமநிலையால் கட்டுப்படுகிறது எனக் கருதுகிறது.

  • வாதம் – இயக்கம், நரம்பு, இரத்த ஓட்டம், மூட்டு செயல்பாடுகள்

  • பித்தம் – செரிமானம், உள்வெப்பம், ஆற்றல் உற்பத்தி

  • கபம் – உடல் கட்டமைப்பு, சளி, ஈரப்பதம், நோய் எதிர்ப்பு சக்தி

இவை சமநிலை குலைந்தால், பல்வேறு நோய்கள் தோன்றும். சிகிச்சையில் மூலிகை மருந்துகள், வெளிச்சிகிச்சை (தொக்கணம், பற்று, ஒற்றடம், தைலதாரை, நசியம்), உணவுமுறை, வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆகியவை இணைந்து பயன்படுத்தப்படும்.

வாத நோய்கள்

     நாடிகளில் முதன்மையானது வாத நாடி ஆகும். நம் உடலில் வாதம் அதிகரிப்பதனால் வாதநாடி தன்னிலையில் இருந்து பிறழ்ந்து மாறுபட்ட நிலையை அடைகிறது. இந் நாடியில் ஏற்படக்கூடிய மாறுபட்ட நிலையே, நம் உடலில் வாத நோய்கள் உருவாக காரணமாக உள்ளது. வாதத்தில் முக்கியமாக 84 நோய்கள் உள்ளது. அவற்றில் நரம்பு வலி, வாயு, இரத்த அழுத்தம், காக்கா வலிப்பு, பக்கவாதம், இதய நோய் முதலியவை முக்கிய பங்கு வகிக்கிறது. வாதம் என்பது உடலில் இயக்கத்தைக் குறிப்பாக தசை, தசை நார்கள், எலும்புகள் மூட்டுகள் ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. வாதம் சமநிலையில் இருந்தால் உடலின் இயக்கம் சீராக இருக்கும். வாதம் சமநிலையை இழக்கும் போது தசைப்பிடிப்பு, வீக்கம், தசை நார்களில் இருக்கும் பிடிப்பு, மூட்டு வலி, நடுக்கம் போன்ற பிரச்சனைகள் பல ஏற்படும்.

பித்த நோய்கள்

     நாடிகளில் இரண்டாவது முக்கியமானது பித்த நாடி ஆகும். நம் உடலில் பித்தம் அதிகரித்தால், பித்த நாடி தன்னுடைய இயல்பான நிலையை விட்டு மாறி, பலவிதமான நோய்நிலைகளை உண்டாக்கும்.
பித்தம் என்பது உடலின் உள்வெப்பம், செரிமானம், Acne மாற்றம் (Metabolism), இரத்தம் மற்றும் ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.

     பித்தம் தீ மற்றும் நீர் என்ற இரு பஞ்சபூதக் கூறுகளால் ஆனது. இது உடலின் சூடு, நிறம், பசி, தாகம், சுவை உணர்வு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும். பித்தம் சமநிலையில் இருந்தால் உடலின் செரிமான சக்தி, உணவின் சத்து சுரப்பு, இரத்தத்தின் தூய்மை, மன அமைதி ஆகியவை சீராக இருக்கும்.

கப நோய்கள்

     கப நோய்கள் என்பது 96 வகை ஆகும். கபம் என்பது சளி மற்றும் நீர் கோர்த்துக் கொள்ளல் போன்றவற்றைக் குறிக்கும். கபம் உடலின் செயல்பாடுகளான சுவாசம் செரிமானம் போன்ற நிலைகளை குறிக்கிறது. நம் உடலில் கபமானது அதிகப்படுவதால் சுவாசக் கோளாறுகள், தலை நோய்கள், உடல் எடை அதிகரித்தல் மேலும் அதனைச் சார்ந்த நோய்கள் யாவும் உண்டாகும்.

பொது நோய்கள்

வெளி சிகிச்சைகள்

மேலும் விவரங்களுக்கு

Dr. S.மீனா M.D., (S)

Regd. No: 14366

M.R.சித்தாலையா
சித்த மருத்துவமனை
Dr.சின்னசாமி இல்லம்
ராஜிவ் நகர் (தெற்கு)
நாகை மெயின் ரோடு
தொல்காப்பியர் சதுக்கம்
தஞ்சாவூர் – 613 001.

தொடர்புக்கு :
+91 9791 40 2242