32 வகையான புற சிகிச்சை முறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆங்கிலத்தில் ‘Therapeutic Massage’ என்று அழைக்கப்படுகின்ற இந்த சிகிச்சை முறையானது, சித்த மருத்துவத்தில் ‘தொக்கணம்’ என்று அழைக்கப்படுகின்றது. சில நோய்களிலிருந்து முழுமையாக விடுதலை பெறுவதற்கு புற சிகிச்சை முறைகளும் அவசியமாகின்றன. குறிப்பாக நரம்பு சம்பந்தமான நோய்கள், மூட்டுகளில் ஏற்படும் நோய்கள், இரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தசைகளில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றிக்கு தொக்கணம் எனப்படும் புறசிகிச்சை மிகவும் அவசியம்.
தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை(Blood circulation) அதிகரிக்கும், தசையில் தளர்ச்சியை நீக்கும். தசைகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். தசை சூம்பிப் போதல் நோய் நிலைகளில் தொக்கணம் மிகவும் அவசியம். உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை(Blood circulation)தொக்கணம் சிகிச்சை அதிகரிக்க செய்யும். உடல் முழுவதுமுள்ள நிணநீர் ஓட்டத்தை (lymphatic circulation) தொக்கணம் சரிசெய்யும். உடலின் நோய் எதிர்ப்பு (Immunity) சக்தி அதிகரிக்கும். உடலின் மென்தசைகள் ம்ற்றும் மூட்டுகளில் உள்ள இணைப்புத் திசுக்களுக்கு வலிமை தரும். தூக்கமின்மைக்கு தொக்கணம் ஒரு நல்ல சிகிச்சை, நல்ல உறக்கத்தை தரும். உடலுக்கும், மனதிற்கும் அமைதியைத் தரும். மது, போதைப் பொருட்களிலிருந்து விடுபட தொக்கணம் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. நெடுந்தூரம் தினமும் பைக் அல்லது பேருந்துகளில் பயணம் செய்பவர்கள், உடல் உழைப்பு உள்ளவர்கள் போன்றவர்களுக்கு தொக்கணம் செய்தால் உடல் அசதி மாறும். தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும், தோலில் உள்ள கழிவுகள் நீங்கும், தோல் மென்மை அடையும், சுருக்கம் நீங்கும், வயதான தோற்றம் தள்ளிப்போகும், அழகைப் பராமரிக்க விரும்புபவர்கள் மாதம் ஒரு முறை தொக்கணம் செய்து கொள்வது நல்லது.
கழுத்து வலிக்கான எண்ணெய் கட்டு சிகிச்சை
கழுத்து, முதுகெலும்புப்பகுதியில் செய்யப்படும் எண்ணெய் குவிப்பு ஆகும். இந்த சிகிச்சையானது கழுத்தின் வாத நோய்களை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கழுத்து வலிக்கான எண்ணெய் கட்டு நன்மைகள் தோள்பட்டை, மேல் மூட்டு மற்றும் கழுத்து வலி மற்றும் தசைகள் இறுக்கத்தை குறைத்து, வீக்கத்தைக் குறைக்கும். கழுத்தின் இயக்கத்தை மேம்படுத்தும். கைகள், தோள்பட்டை மற்றும் கழுத்துக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்ததும். தலைவலி மற்றும் லேசான தலைச்சுற்றல் ஏற்படுவதைக் குறைக்கும்.
எண்ணெய் கட்டு
இது முக்கியமாக நாள்பட்ட வலி, விறைப்பு, தசைப்பிடிப்பு மற்றும் பல்வேறு கீழ் முதுகுப் பிரச்சினைகளைப் போக்க செய்யப்படுகிறது. Sciatica எனப்படும் நரம்பு நோயினை சரி செய்கிறது. ஏனெனில் சூடான எண்ணெய் திசுக்களில் ஆழமாக ஊடுருவி மூட்டுகளை மேம்படுத்துகிறது, தசைகளுக்கு ஊட்டமளிக்கிறது, மற்றும் தளர்வு(relaxation) ஊக்குவிக்கிறது. முதுகுத் தண்டுவட எண்ணெய் கட்டு என்பது ஒரு புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சையாகும், இது கீழ் முதுகு நோய்களிலிருந்து விடுபட உதவுகிறது, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது. கீழ் முதுகுவலி (Lower back pain), வாதஸ்தம்பம் (Sciatica), தண்டகவாதம் (Lumbar spondylosis ),Herniated disc, Degenerative disc போன்ற நோய்களுக்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மூட்டு வலி எண்ணெய் கட்டு சிகிச்சை
முட்டியைச் சுற்றி பாத்தி போல உளுந்து மாவால் கட்டி, மருத்துவக் குணமுள்ள எண்ணெய்களை 30 – 45 நிமிடங்கள் தேக்கி வைக்கும் சிகிச்சை முறை ஆகும்.
இந்த சிகிச்சை முறைக்கு பயன்படும் எண்ணெய்களானது, நோயாளியின் வயது, தோஷம், காலம், பலம் போன்றவற்றை அனுசரித்து, பயன்படுத்தப்படும். 14 – 21 நாட்கள் இந்த சிகிச்சை செய்யப்படும். மனித உடலுக்கு தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் சக்தி 100 சதவீதம் உள்ளது. இவற்றைத் தூண்டும் சிகிச்சை தான், இது முட்டி தேய்மானம், ஜவ்வு குறைதல் போன்ற உபாதைகள் 60 – 70 சதவீதம் இருந்தாலும், இந்த பாரம்பரிய சிகிச்சையை ஒரு முறை செய்து பார்க்கலாம். 70 வயதிற்கு மேல், சராசரி உடல் எடையை விடவும், 20 – 30 கிலோ அதிக உடல் பருமனுடன் இருந்தால், இயற்கை மருத்துவ முறைகளான சித்தா, மருந்துகள், உணவு பழக்கங்கள், மூட்டு சிகிச்சை எல்லாம் செய்து, அவை நல்ல பலன் கொடுக்காவிட்டால், மூட்டு மாற்று சிகிச்சை அவசியம் செய்து கொள்ளலாம்.
பலன்கள்
தைல தாரை
இது மூளை-மன-நரம்பு மையங்களை சீரமைக்கும் தன்மை கொண்டது. இன்றைய நவீன வாழ்க்கை முறையில், மனஅழுத்தம், தூக்கக்குறைவு, சீரான உணவுப்பழக்கம் இல்லாமை ஆகியவைகளால் உடலின் முத்தோஷங்களான வாதம், பித்தம்,கபம் பாதிக்கப்படுகிறது. தாரை சிகிச்சை ஆனது முத்தோஷ சமநிலைக்கு முக்கியமானது.
தைல தாரை சிகிச்சையின் நன்மைகள்
நீராவி குளியல்
நீராவி குளியல், மருத்துவ மூலிகைகள் கலந்த கொதிக்கும் நீரில் இருந்து உருவாகும் நீராவிக்கு உடலை வெளிப்படுத்துவதை உள்ளடக்கிய ஒரு சிகிச்சை முறையாகும்.
இந்த சிகிச்சையானது
கீழ்கண்ட வாத நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1.முழங்கால் மூட்டுகள் ( Knee joints)
2.கணுக்கால் மூட்டுகள் (Ankle joints)
3.முள்ளந்தண்டு மூட்டுகள் (Spine joints)
4.கைவிரல் மூட்டுகள் (Hand joints)
5.முழங்கை மூட்டுகள் (Elbow joints)
6.தோள்பட்டை மூட்டுகள் (Shoulder joints)
ஆகிய அனைத்து விதமான மூட்டு பிரச்சினைகளையும் இச்சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
கீழ்கண்ட நரம்பு பாதிப்பு நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கீழ்கண்ட தோல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
Healing Roots, Modern Trust.
Authentic Siddha care for modern health. Led by experienced doctors, we offer natural, personalized treatments for chronic, neurological, and women’s health conditions—rooted in tradition, delivered with trust.
Copyright 2025 – M.R. Siddhalaya Siddha Hospital | Website Designed by : Xirodesign.in
Terms and Conditions | Privacy Policy | FAQ